தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புகளுள் ஒன்று முன்னம் ஆகும். இது அகப்பொருளிலும் புறப்பொருளிலும் வரும் என்று பேராசிரியர் விளக்கம் எழுதியுள்ளார். தொல்காப்பியர் உள்ளுறை, இறைச்சி பற்றிக் கூறும் கருத்துகள் குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. இவை போலவே முன்னமும் குறிப்புப் பொருளைத் தருகின்றது. முன்னம் பற்றித் தொல்காப்பியர் கூறும்போது,
இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரித்தென / அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம் ஆகும் என்கின்றார்.
No comments:
Post a Comment