தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புகளுள் 25 ஆவது செய்யுள் உறுப்பு மாட்டு ஆகும். பொருள் புலப்பாட்டை அறிந்து கொள்ள உதவுவது மாட்டு. ஒன்றை இன்னொன்றோடு சேர்த்தலை மாட்டு என்பர். தொல்காப்பியர் மாட்டு பற்றிக் கூறும் நூற்பா வருமாறு.
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின்
தொல்காப்பியர் கூறும் மாட்டு உறுப்பை நச்சினார்க்கினியர் தமது உரையில் பயன்படுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment