தமிழ் இலக்கிய, இலக்கண, மொழியியல் சிந்தனைகளை வெளியிடுதலே இதன் நோக்கம்
Friday, 24 May 2024
தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (மெய்ப்பாடு)
அகம், புறம் இரண்டிற்கும் பொதுவாக வழங்கும் உறுப்பு மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியர் மெய்ப்பாட்டிற்கு என்று தனி இயலை வகுத்துள்ளார். செய்யுளியலில் மெய்ப்பாட்டின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகையில்,
உய்த்து உணர்வு இன்றித் தலைவரும் பொருளான்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும் என்கின்றார்.
மனதில் தோன்றிய குறிப்பு உடலில் வெளிப்படுவது மெய்ப்பாடு ஆகும்.
உணர்ச்சியின் மூலமாகப் பொருளைப் புலப்படுத்தும் உறுப்பு மெய்ப்பாடு ஆகும்.
No comments:
Post a Comment